மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று 50 தோப்புக்கரணம் போட்ட தலைமை ஆசிரியர்
மாணவ, மாணவியர் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர்களின் முன்பாக தலைமை ஆசிரியர் 50 தோப்புக்கரணம் போட்டுள்ளார்.
தோப்புக்கரணம் போட்ட தலைமை ஆசிரியர்
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், விஜயநகரம் மாவட்டம், பொப்புலி அருகே உள்ள பெண்ட கிராமத்தில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களில் பலர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. மேலும், சரியாக படிக்கவும் இல்லை.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக மாணவ, மாணவியரை வழக்கம்போல் பள்ளி மேடைக்கு முன்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வர சொன்னார்.
அப்போது, மாணவர்களின் முன்பாக தரையில் விழுந்து வணங்கியதுடன் 50 தோப்புக்கரணமும் போட்டார்.
பின்னர் அவர்களிடம், இனியாவது நன்றாக படியுங்கள், வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று கூறிவிட்டு அறைக்கு சென்றுவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |