கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டிக்காக மருத்துவமனை முன் இளம்பெண் செய்யும் வித்தியாசமான செயல்: வெளியாகியுள்ள வீடியோ
கனடாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் பாட்டிக்காக, மருத்துவமனை முன் குணமாக்கும் நடனம் ஒன்றை தங்கள் பாரம்பரிய வழக்கப்படி ஆடுகிறார் ஒரு இளம்பெண்.
Regina நகரத்தைச் சேர்ந்த Lorna Standingready என்ற பூர்வக்குடியின பெண்மணி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பேத்தியான Meadow Musqua (17), மருத்துவமனை முன் அவர்களது பாரம்பரிய வழக்கப்படி, தன் பாட்டி குணமடைவதற்காக நடனம் ஒன்றை ஆடுகிறார்.
அவருடன், அவரது தோழியான Kiana Francisம் இணைந்துகொண்டுள்ளார்.
பாரம்பரியப்படி நடனமாடினாலும், மாஸ்க் அணிவதையும் சானிடைசர் பயன்படுத்துவதையும் மறக்கவில்லை Musqua.
அத்துடன், மற்றவர்களும் மாஸ்க் அணிவதையும் சானிடைசர் பயன்படுத்துவதையும் பின்பற்றவேண்டும் என்கிறார் அவர்.
வெளியாகியுள்ள வீடியோவில், Musquaவும் அவரது தோழியான Francisம் பாரம்பரிய நடனமாடுவதைக் காணலாம்.