இந்த உணவுகளை தப்பி தவறி கூட தொடர்ந்து சாப்பிடாதீங்க! புற்றுநோய் செல்களை அதிகரிக்குமாம்
food
cancer
By Kishanthini
பொதுவாக உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. புற்றுநோய் செல்கள் உடலில் வளர்வதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் தொடர்பான நோய்கள் உருவாக்கி மரணத்திற்கு வழி வகுக்கும்.
எனவே புற்றுநோய் செல்களை அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொண்டு இவற்றில் தவிர்ப்பதே நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள், புகை மற்றும் உப்பை சேர்த்து பதப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்பட்டு விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது ஒருவருக்கு பெருங்குடல் மற்றும் வயிற்று புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
- கேன்சர் செல்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றொரு ஆபத்தான உணவு பழக்கம் அதிகமாக வறுத்த உணவுகளை சாப்பிடுவது. உருளைக்கிழங்கு அல்லது இறைச்சி போன்ற உணவுகளை அதிக சூட்டில் வறுத்து சமைக்கும் போது அதில் acrylamide என்ற கலவை உருவாகிறது. இந்த கலவை கேன்சர் பண்புகளை கொண்டது மற்றும் டிஎன்ஏ-வை சேதப்படுத்தும்.
- ரீஃபைண்ட் அதாவது சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, எண்ணெய் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கேன்சர் செல்களை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதிகமாக சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் பொருட்களை எடுத்து கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சி அபாயத்தை அதிகரித்து பல வகையான கேன்சர்கள் ஏற்பட வழிவகுக்கும்.
- பால், சீஸ், தயிர் போன்றவற்றை மிதமிஞ்சி சாப்பிடுவது புரோஸ்டேட் கேன்சர் உயிரணுக்களின் பெருக்கம் அல்லது உற்பத்தியை அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- இன்ஸ்டென்ட்டாக சமைத்து சாப்பிட கூடிய நூடுல்ஸ், பாஸ்தா, உப்புமா, இட்லி உள்ளிட்ட பேக்டு உணவு பொருட்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US