பெண்களை மட்டுமே குறி வைத்து தாக்கும் 5 வகை புற்றுநோய்கள்! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க
புற்றுநோய்கள் பல உள்ளன. அதில் பெண்களை மட்டுமே குறி வைத்து அதிகம் தாக்கும் இந்த புற்றுநோய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
தற்போது அவை என்ன என்பதையும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதையும் பார்ப்போம்.
சினைப்பை புற்றுநோய் :
சினைப்பை புற்றுநோய் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்பில் உருவாகிறது. சினைப்பை புற்றுநோய் இடுப்பு மற்றும் வயிற்றுக்கு பரவும் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகலாம்.
இந்த கட்டத்தில், சிகிச்சையளிப்பது கடினமானது அதேசமயம் ஆபத்தானதும் கூட. அவ்வாறு சினைப்பை புற்றுநோய் தீவிரமடையும் சமயத்தில் வெஜினாவில் இரத்தப்போக்கு , இடுப்பு பகுதியில் வலி , வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகளை சந்திப்பீர்கள்.
இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கருப்பை புற்றுநோய்
கருப்பை புற்றுநோய் என்பது ஒரு நபரின் கருப்பையில் உருவாகிறது. பெரும்பாலான கருப்பை புற்றுநோய் கருப்பையின் செல்களின் அடுக்கில் உருவாகுகிறது. இதில் இரத்தப்போக்கு அதிகம் வெளியேறுவதே இதன் அறிகுறியாகும்.
அதிக எடை மற்றும் சிறு வயதிலேயே மாதவிடாய் தொடங்குவது போன்றவை ஆபத்து காரணிகளில் அடங்கும். கதிரியக்கத்துடன், இந்த புற்றுநோயை ஹார்மோன் சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
பெரும்பாலும் பாலியல் உறவு மூலம் பரவும் தொற்று, HPV காரணமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகிறது. இது கருப்பை வாயில் அதாவது கருப்பையின் கீழ் பகுதியில் வீரியம் மிக்க கட்டியாக உருவாகிறது.
இந்த வகை புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே அரிதாகவே அறிகுறிகளைக் காட்டும். ஆனால் PAP ஸ்மியர் ஸ்கிரீனிங் மற்றும் HPV தடுப்பூசி மூலம் தடுக்கலாம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவையும் அடங்கும்.
யோனி புற்றுநோய் மற்றும் வல்வார் புற்றுநோய்
பெண்களின் பிறப்புறுப்பை தாக்கும் புற்றுநோயே யோனி அல்லது பிறப்புறுப்பு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. வல்வார் என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு வகை சருமம்.
அந்த பகுதி பாதிக்கப்பட்டு புற்றுநோயாக மாறும். அது வல்வார் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் பெரும்பாலும் வெஜினாவின் வெளிப்புற வாய் பகுதியில் பரவக் கூடியது. யோனி மற்றும் வல்வார் புற்றுநோய் இரண்டும் ஒரே மாதிரியான புற்றுநோய்கள் ஆனால் மிகவும் அரிதானவை.
பொதுவான அறிகுறிகள் , வல்வாவின் அரிப்பு, இரத்தப்போக்கு, தடிப்புகள், புண்கள், கட்டி அல்லது வலி, இரத்தக் கசிவு ஆகியவை அடங்கும்.