உப்புமா சாப்பிட்டால் ஏற்படும் அற்புதங்கள்! இனி சாப்பிடாமல் ஓரம்கட்ட மாட்டீங்க
உப்புமா என்ற வார்த்தையை சொன்னாலே சிலர் தெறித்து ஓடுவார்கள். ஆகாத மருமகன் வீட்டுக்கு வந்தா உப்புமாவைக் கிண்டி வை!’ என ஒரு பழமொழியே உண்டு. அந்தளவுக்கு உப்புமாவை இந்த காலத்து நபர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை.
ஆனால் உப்புமாவில் எந்தளவுக்கு சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 100 கிராம் உப்புமாவில் 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம், கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன.
உடல் எடையை குறைக்கலாம்
இது ஆற்றலைத் தரக்கூடிய சிற்றுண்டி. காலையில் ஒருவர் உப்புமா சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதற்குமான சக்தி இதிலிருந்து கிடைத்துவிடும்; பொதுவாக, மதிய நேரத்துக்குப் பிறகு சிலருக்கு ஏற்படும் சுறுசுறுப்பின்மை, மந்தத் தன்மையையும் போக்கும்.
இதைத் தயாரிக்கும்போது நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிப்பது கூடுதல் சக்தியை அளிக்கும். உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவா உப்புமா.
இதயம் பலமாவதோடு எலும்பு உறுதியாகும்
ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கச் செய்யும். ரவை, இதய நலத்துக்கும் உதவக்கூடியது. இதயச் செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும்.
ரவையில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த ஓட்டம் சீராக உதவும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். சிலருக்கு ரவையிலிருக்கும் `குளூட்டன்’ (Gluten) என்ற பசைச் சத்து ஒத்துக்கொள்ளாது. அப்படி அலர்ஜி உள்ளவர்கள் ரவா உப்புமாவைத் தவிர்ப்பதே சிறந்தது. மற்றபடி ரவா உப்புமா மிக நல்லது.