டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பிஸ்கட் இல்லாமல் டீ குடித்தால் சிலருக்கு டீ குடித்த திருப்தியே இருக்காது. டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடும்போது தான் டீயே சுவையாக இருப்பது போல தோன்றும்.
ஆனால் அப்படி சாப்பிடும் போது உடலில் எந்த மாதிரியான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி பார்க்கலாம்.
கார்டியோ வாஸ்குலர் ஆபத்துகள்
பிஸ்கட்டுகள் பெரும்பாலும் மைதா மற்றும் அதிகமாக ரீஃபைண்ட் ஆயில் மற்றும் பட்டர் ஆகியவை சேர்க்கப்படுகிறது. இவை டிரான்ஸ் கொழுப்பாக மாறி, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதை காஃபைன் கொண்ட டீ, காபி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது இது ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து கார்டியோ வாஸ்குலர் நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.
அதிகரிக்கும் இரத்த அழுத்தம்
உப்பு பிஸ்கட்டை விரும்பி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
ஏற்கனவே பிஸ்கட்டி்ல் சேர்க்கப்படும் மாவு மற்றும் எண்ணெய் உடலுக்கு மிக மோசமானது. அதோடு உப்பும் அதிகமாக சேர்க்கப்படும் பிஸ்கட் சாப்பிடும்போது அது ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அது பக்கவாத ஆபத்தைக் கூட ஏற்படுத்தும்.
பருக்கள் உண்டாகும்
பிஸ்கட்டுகளில் இருக்கும் சர்க்கரையும் டீயில் இருக்கும் சர்க்கரையும் ஒன்றாக சேரும் போது சருமத்தில் சீபம் சுரப்பு உண்டாகும்.
சருமத்தில் சீபம் சுரப்பு அதிகரிக்கும் போது முகத்தில் பருக்கள் அதிகமாக வரும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிடும்பொழுது பருக்கள் அப்படியே அமுங்கி. கரும்புள்ளிகளாகவும் மாறும் வாய்ப்பு உண்டு.
வயிற்றுபோக்கு உண்டாகும்
தினமும் பிஸ்கட் சாப்பிடுவது அல்லது டீயில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடுவது ஆகியவை குடல் ஆரோக்கியத்தையும் ஜீரணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை தொடர்ந்து சாப்பிடும்பொழுது அஜீரணக் கோளாறும் அதனால் அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
இரத்த சர்க்கரை அதிகரிக்கும்
பிஸ்கட்டுகளில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்டவை இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு பாதிக்கும்.
கிளைசெமிக் குறியீடு பிஸ்கட்டில் மிக மிக அதிகம் என்பதால் அது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தும்.
நீர்ச்சத்து குறைபாடு
பிஸ்கட்டுகளில் இருக்கும் மாவுப் பொருள்கள், சர்க்கரை, கொழுப்பு ஆகியவை இயற்கையாகவே உடலில் உள்ள தண்ணீரை அதிகமாக உறிஞ்சும்.
மேலும் இது குடல் மற்றும் ஜீரண மண்டலத்தில் இன்ஃபிளமேஷன்கள் மற்றும் அழற்சியை ஏற்படுத்தக் கூடும்.
மலச்சிக்கல் உண்டாகும்
பிஸ்கட்டுகளில் இருக்கும் கார்போ ஹைட்ரேட், கொழுப்பு ஆகியவை சேர்ந்து ஜீரண ஆற்றலை பாதிக்கும்.
தினமும் தொடர்ந்து டீயுடன் பிஸ்கட்டுகளைச் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
எடை அதிகரிக்கும்
தினமும் பிஸ்கட்டுகளில் டீயை தொட்டுச் சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
Shutterstock
இதில் கலோரிகள், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டும் அதிகம், நார்ச்சத்தோ அல்லது வேறு ஊட்டச்சத்துக்களோ கிடையாது என்பதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |