புற்றுநோய் - நீரிழிவு.., சப்ஜா விதைகளின் 9 ஆரோக்கிய நன்மைகள்- மருத்துவரின் கூற்று
இனிப்பு துளசி அல்லது சீனி துளசி நம் எல்லோர் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகை செடியாகும்.
இந்த செடியின் விதைகள் சப்ஜா விதைகள் என அழைக்கப்படுகின்றது. இது குளிர்பானங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
நீரில் ஊறவைத்தால் இது நீரினை உறிஞ்சி வழவழப்புத்தன்மையுடன் இருக்கும். சர்பத்கள் மற்றும் பலூடாவிலும் இது சேர்க்கப்படுகிறது.
அந்தவகையில் இந்த சப்ஜா விதைகளின் 12 ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
தினமும் ஒரு ஸ்பூன்(13g) சப்ஜா விதைகள் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
1. கால்சியம் சத்து 15%, மெங்கனீசியம் சத்து 10% மற்றும் இரும்புசத்து கிடைக்கின்றது.
2. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து 7g கிடைக்கின்றது.
3. இதில் ஜீரணம் செய்ய உதவும் புரோபயாடிக்குகள் என்ற நல்ல கிருமிகள் கிடைக்கின்றது. இதனால் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
4. இந்த விதைகளில் உள்ள பெக்டின் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
5. ஒரு மாதத்திற்கு, காலை உணவிற்கு பின் இந்த சப்ஜா விதைகளை ஊறவைத்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.
6. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
7. உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அளிக்க உதவுகிறது.
8. இதில் உள்ள ஃபிளாவனாய்டு பாலிபினால்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடென்ட் சத்துக்கள் புற்றுநோய், வீக்கம், அலர்ஜியை குறைக்க கூடியது.
9. ஒமேகா 3 கொழுப்பு இந்த சப்ஜா விதைகள் எடுத்துக்கொள்வதனால் கிடைக்கின்றது. இதனை இதய ஆரோக்கியம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |