வெறும் வயிற்றில் நெல்லி ஜூஸ்; உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!
பொதுவாகவே நாம் எடுத்துக்கொள்ளும் பழங்களில் பல ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றது. அதிலும் புளிப்பு சுவையுடைய பழங்களில் ஏராளமாக விட்டமின்கள் இருகின்றன.
அதில் ஒன்று தான் நெல்லிக்காய். நெல்லிக்காய் சாற்றில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
ஆகவே இந்த நெல்லிக்காய் சாற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள்
நெல்லிக்காயில் முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கரோட்டின், வைட்டமின் பி, ஈ மற்றும் ஏ உள்ளிட்டவை இருகின்றன.
நெல்லிக்காயில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
-
உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
-
செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலையும் போக்கி, குடல் இயக்கத்தை சீராக்கும்.
-
ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
- கண்களை பாதுகாக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும்?
-
உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும்.
-
செரிமான அமைப்பை வலுப்படுத்தும்.
- மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.
-
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
-
சிறுநீர் உற்பத்திக்கு உதவும்.
- பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது.
-
நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும்.
மேலும் நெல்லிகாய் அதிகமாகச் சாப்பிடுபவர்கள், அதிகளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். ஒருநாளைக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துவது நல்லது. இல்லையென்றால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வு, முதிர்ச்சியான தோற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |