உயிர் காக்கும் வெற்றிலை... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
பொதுவாக வெற்றிலையை சுண்ணாம்புடன் பயன்படுத்தி தான் பார்த்திருப்போம். இது வாய் புத்துணர்ச்சியூட்டுவதாக செயல்படுகிறது.
ஆசிய கலாச்சாரங்களில் நீண்ட காலமாகப் போற்றப்படும் வெற்றிலையில் பலவிதமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது.
இது இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படுகிறது.
செரிமானத்திற்கு உதவுவது முதல் சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவது வரை பல நன்மைகள் நிரம்பியுள்ளது.
இந்த பதிவில், வெற்றிலையின் மகத்தான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
வெற்றிலையின் ஊட்டச்சத்து
-
நீர் 85-90%
- புரதம் 3-3.5%
- கொழுப்பு 0.4-1%
-
கனிமங்கள் 2.3-3.3%
- ஃபைபர் 2.3%
- கார்போஹைட்ரேட் 0.5-6.1%
- பொட்டாசியம் 1.1-4.6%
- கால்சியம் 0.2-0.5%
- வைட்டமின் சி 0.005-0.01%
- அத்தியாவசிய எண்ணெய் 0.08-0.2%
வெற்றிலையின் பண்புகள்
-
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.
- ஆக்ஸிஜனேற்றியாக இருகின்றது.
-
பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
- ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும்.
- காயங்களை ஆற செய்யும்.
- மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
ஆரோக்கியத்திற்கு வெற்றிலையின் நன்மைகள்
1. தலைவலி
வெற்றிலையில் குளிர்ச்சி மற்றும் வலி நிவாரணி பண்பு காணப்படுகின்றது. கடுமையான தலைவலியிலிருந்து வலியைப் போக்க இது பயன்படும்.
2. புற்றுநோய்
வெற்றிலையில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் காணப்படுவதால் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
3. இரைப்பை புண்
வெற்றிலை இரைப்பைப் பாதுகாக்கும். அவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, வெற்றிலை இரைப்பை புண்களுக்கு சாதகமாக இருக்கும் நொதி செயல்பாட்டை அதிகரிக்கும்.
மேலும் வெற்றிலையை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |