சர்க்கரை அளவு சட்டுன்னு குறைய வீட்டில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்: இப்படி சாப்பிடுங்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க நம் வீட்டில் இருக்கும் கருப்பு எள்ளை பயன்படுத்தலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் கருப்பு எள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விரிவாக காணலாம்.
சர்க்கரையை குறைக்க கருப்பு எள்
சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் உணவுகளால் செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கருப்பு எள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு எள்ளில் பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திப்பது அவசியம். கருப்பு எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள அமினோ அமிலங்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது.
கருப்பு எள்ளில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
கருப்பு எள்ளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் சர்க்கரையை உறிஞ்சுவது மெதுவாக்குகிறது. கருப்பு எள்ளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு உதவுகிறது. இதன் நுகர்வு எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
எப்படி சாப்பிடுவது?
- கருப்பு எள்ளை வறுத்து அதை பிடித்த சாலட்டில் தூவி சாப்பிடலாம்.
- வால்நட்ஸ் உடன் கருப்பு எள்ளைக் கலந்து சட்னியும் தயாரிக்கப்படுகிறது.
- கருப்பு எள்ளைத் தயிருடன் கலந்து சாப்பிடலாம்.
- குறிப்பாக, கருப்பு எள் உட்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |