தினம் ஒரு கப் சியா தண்ணீர்.., உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சியா விதைகள் என்பவை சால்வியா ஹிஸ்பானிகா தாவரத்தில் இருந்து பெறப்படும் மிகச்சிறிய விதைகளாகும்.
இந்த சியா விதையில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், தினமும் ஒரு கப் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலிற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சியா விதையில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், எடையை குறைக்க உதவுகிறது.
சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன.
இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை நிலைநிறுத்த உதவுகிறது.
மேலும், சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புற ஊதா கதிர்களால் (UV) ஏற்படும் சரும பாதிப்பு மற்றும் முகப்பருவை குணப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |