கூந்தல் அடர்த்தியா வளரனுமா? ஒரு கிளாஸ் பாலுடன் Dragon fruit சாப்பிடுங்க!
டிராகன் பழம் உடலிற்கு பல நன்மைகளை தருகின்றது. இது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பின் அபாயங்களைக் குறைத்தல், செரிமானத்திற்கு உதவுதல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது ஒரு டிராகனை போன்று இருக்கும்.அதனால் இந்தப் பழத்திற்கு அதன் பெயர் வந்தது.
இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட இந்த பழத்தில் என்ன ஊட்டச்சத்துகள் அதிகமாக காணப்படுகின்றது என்றும் உடலிற்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
டிராகன் பழத்தின் நன்மைகள்
1. சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது
இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளிடையே மேலும் மருத்துவ விளைவுகளை தடுக்கவும் உதவும்.
2. புற்றுநோயின் அபாயங்களைக் குறைக்கிறது
இந்த பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு, அல்சைமர் பார்கின்சன், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
இந்த பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிக வைட்டமின் சி பாதிக்கப்படக்கூடிய கொடிய நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.
4. செரிமானத்திற்கு நல்லது
இந்த பழத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. இது அதிக நார்ச்சத்து நிறைந்தது. செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது எனலாம்.
5. கூந்தலுக்கு நல்லது
அடர்த்தியான, கருப்பு மற்றும் பளபளப்பான முடி வேண்டுமா? டிராகன் ஃப்ரூட் பவுடரை ஒரு கிளாஸ் பாலுடன் தினமும் ஒருமுறை கலந்து குடிக்கவும். இதனால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.
மேலும் இந்த பழத்தை வைத்து என்ன செய்து சாப்பிடலாம் என சற்று பார்க்கலாம்.
டிராகன் ஃப்ரூட் ஷேக்
தேவையான பொருட்கள்
-
வாழைப்பழம் சிறிய துண்டுகள்
-
1 முழு டிராகன் பழம்
- 1 கிளாஸ் பால்
-
4 ½ கிளாஸ் தண்ணீர்
- 3 ஸ்பூன் சர்க்கரை
- 2 முந்திரி
செய்முறை
-
முதலில் வாழைப்பழம் மற்றும் டிராகன் பழத்தைத மிக்ஸியில் சேர்க்க வேண்டும்.
- அடுத்து பால் மற்றும் சீனி சேர்த்து அரைக்க வேண்டும். தேவையானால் பாலு அதிகமாக சேர்க்கலாம்.
-
இவ்வாறு செய்தால் சுவையான டிராகன் ஃப்ரூட் ஷேக் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |