காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சூடான ஏலக்காய் நீர்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவுகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு முழுமையாக வந்தடைகின்றன.
அந்த வகையில், சூடான ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
Shutterstock
கிடைக்கும் நன்மைகள்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக ஏலக்காய் நீரை குடித்தால், அது செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்றவற்றைத் தடுக்கும்.
ஏலக்காய் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் இதில் உள்ள டையூரிக் பண்புகள், உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Thinkstock
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவி புரிந்து, விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஏலக்காய் நீரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவி புரிவதோடு, வாயின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மேலும் ஏலக்காய் நீரை தினசரி குடித்து வருவதால் ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து பாதுகாக்க உதவுகிறது.
ஆய்வுகளின் படி, ஏலக்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும்.
மேலும் இந்த ஏலக்காய் நீரை குடித்து வந்தால், தொண்டை கரகரப்பு, வறட்சி போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.