வெறும் வயிற்றில் தினம் ஒரு டம்ளர் லெமன் டீ: கிடைக்கும் பலன்கள் ஏராளம்
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்யாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன.
இந்த அத்யாவசிய தாதுக்கள் உடலில் உள்ள எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
வெறும் வயிற்றில் தினமும் ஒரு டம்ளர் லெமன் டீ குடிப்பதால் உடலில் பல நன்மைகள் வந்தடைகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை - 1
- இஞ்சி- 2 துண்டு
- தண்ணீர்- 1½ கப்
- வெல்லம்- 3 ஸ்பூன்
செய்முறை
- ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் எலுமிச்சை சாறு, இஞ்சி, வெல்லம் சேர்த்து கலந்து இறக்கிவிடவும்.
- பின் இதை வடிகட்டி சூடாக பருகலாம்.
கிடைக்கும் நன்மைகள்
லெமன் டீயில் சேர்க்கப்படும் வெல்லம் இரும்பின் சக்தியாக இருக்கிறது. இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் செயல்பாடுகளுக்கு முக்கியமானதாக அமைகிறது.
லெமன் டீ குடிப்பதால் கல்லீரலில் சேர்ந்திருக்கின்ற கழிவுகள் மற்றும் நச்சுகள் ஆகியவை வெளியேறுவதால் உடலில் முழுவதுமாக நச்சு நீக்கப்படுகிறது.
அதிகளவு உணவு உட்கொண்ட பிறகு லெமன் டீ குடித்தால் உடலில் செரிமானம் கணிசமாக மேம்படுகிறது.
லெமன் டீயில் உள்ள அஸ்ட்ரிஜென்ட்கள் இறந்த சரும செல்களை அகற்றி முகத்தை புத்துணர்ச்சியடையச் செய்ய உதவுகின்றன.
எலுமிச்சை பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சியை திறம்பட எதிர்த்து ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எலுமிச்சையில் உள்ள ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் தாவர ஃபிளாவனாய்டுகள் கொழுப்பைக் குறைக்கும் திறன்களைக் கொண்டுள்ளன.
மேலும் மாலை நேரத்தில் லெமன் டீ பருகினால் இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்பை தடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |