தினமும் ஒரு கப் மாதுளை டீ.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மாதுளம் பழத்தில் வைட்டமின் C, ஃபோலேட் , நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கால் நிறைந்துள்ளது.
இது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது.
இந்நிலையில், மாதுளை டீ என்பது மாதுளை பழத்தின் விதைகள், தோல் அல்லது சாற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும்.

மேலும், மாதுளை டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், தினமும் ஒரு கப் மாதுளை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன நன்மைகள்?
மாதுளம் பழ தோலில் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
அதேபோல், இதில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூட்டு வலி மற்றும் கால் வலியை குறைக்க உதவுகிறது.
குறிப்பாக இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

மாதுளை டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
அதேபோல், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், கருமை மற்றும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன.
மேலும், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை தூண்டுவதோடு, வயிற்று உப்புசம், அஜீரணம் மற்றும் குடல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |