தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக மஞ்சள் விளங்குகின்றது.
மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் , ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகிறது. இதில் உள்ள குர்குமின் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, ஆன்டி கார்சினோஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை காணப்படுகிறது. இதனை வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பதால் நாம் ஏகப்பட்ட நன்மைகளை பெற முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது அதில் 2 சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து 1-2 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இப்பொழுது அந்த தண்ணீரை வடிகட்டி சூடுபடுத்துங்கள். இந்த பானத்தின் சுவையை அதிகரிக்க அதில் சிறுதளவு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
நன்மைகள்
- ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பது உங்க மூட்டு வலியை குணப்படுத்த உதவி செய்யும்.
- மஞ்சளில் உள்ள குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது நோயை தடுக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
- மஞ்சளை தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது அதன் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மெட்டா பாலிசத்தை அதிகரித்து எடை இழப்பை பெற உதவுகிறது.
- மஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளன. இது உங்க சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்கிறது. வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது.
- .உடலில் உள்ள அனைத்து கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு வெறும் ஒரு டம்ளர் நீரில் மஞ்சள் கலந்து குடித்து வரலாம்.