தினமும் ஒரு நெல்லிக்காய்.., என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான உணவுகளில் நெல்லிக்காயும் ஒன்று.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன.
இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதை விட, ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
அந்தவகையில், தினமும் வேக வைத்த ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
செரிமானம் மேம்படும்- ஆவியில் வேக வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டால் மெட்டபாலிசம் உயரும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ந்து, செரிமானம் சீராகி, மலச்சிக்கல் குறையும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்- இதில் உள்ள வைட்டமின் C உடலை பாதுகாக்கும். சளி, இருமல் போன்ற தொற்றுகளை எதிர்க்க உதவும்.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்- நெல்லிக்காய் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும். முடி உதிர்வை குறைத்து, முடி வலிமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும்.
இதய ஆரோக்கியம் பாதுகாப்பு- கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். இதய நோய் அபாயம் குறையும்.
கண் பார்வை மேம்படும்- தினமும் சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும். வயது காரணமான கண் பிரச்சனைகள் குறையும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |