தினசரி உணவில் கருப்பு கவுனி அரிசி.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
கருப்பு கவுனி அரிசி உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
குறிப்பாக உடல் எடை மற்றும் கொழுப்பைக் குறைக்கவும், நீரிழிவு மற்றும் உடல் பருமன் அபாயங்களைத் தடுக்கவும் உதவுகிறது.
இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு நார்ச்சத்து நிறைந்த தானியமாகும்.
அந்தவகையில், தினமும் உணவில் கருப்பு கவுனி அரிசி சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
கருப்பு கவுனி அரிசியின் அடர் நிறத்திற்கு காரணமான ஆந்தோசயனின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சியை குறைப்பதோடு, இருதய நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள குறைவான கொழுப்பு மற்றும் அதிகமான நார்ச்சத்து உடலின் ஆரோக்கியமான கொழுப்பு அளவுகளை பராமரிக்க உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இருதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.
கருப்பு கவுனி அரிசியில் அதிகமாக உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
கருப்பு கவுனி அரிசி குறைந்த கிளைசெமிக் அளவை (Glycemic Index - GI) கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நன்மை தரும்.
இதில் உள்ள சின்க், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும், இது ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கும் மிகுந்த நன்மைகளை வழங்குகிறது.
எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளதால் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளை தடுக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |