தினமும் ஒரு கொய்யாப்பழம்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
பழங்களில் விலைக்குறைவில் கிடைக்கும் ஒரு அற்புதமான மற்றும் சுவையான பழம் தான் கொய்யாப்பழம்.
ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் தான் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகமாக உள்ளன.
ஒரு கொய்யாப்பழமானது 4 ஆரஞ்சு மற்றும் 10 எலுமிச்சைக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கொய்யா பழம் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
கொய்யாப்பழத்தில் இரண்டு வகைகள் உள்ளளன. அவை பிங்க் நிற கொய்யாப்பழம் மற்றும் வெள்ளை நிற கொய்யாப்பழம்.
இரத்த சோகை உள்ளவர்கள் பிங்க் கொய்யாப்பழத்தை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி புரிந்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் ப்ரீ டயாபெடிக் உள்ளவர்கள் வெள்ளை கொய்யாப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை சற்று குறைவு.
அந்தவகையில், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
கொலஸ்ட்ரால் குறையும்- கொய்யாப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்- கொய்யாப்பழத்தில் உள்ள கரையாத நார்ச்சத்து மலத்தை இளகச் செய்து, மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுவிக்கும்.
சர்க்கரை நோய்க்கு நல்லது- கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும்.
எடை குறையும்- கொய்யாப்பழம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும் மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |