தினமும் ஒரு கப் பொரி.., கிடைக்கும் அற்புத நன்மைகள் இதோ
அரிசி பொரி மிகவும் எளிமையாக குறைந்த விலையில் கிடைக்க கூடிய ஒரு உணவு பொருளாகும்.
பொதுவாக பொரி பண்டிகை காலங்களில் சாமிக்கு படையல் வைத்து வழிபட கூடியது.
இந்த அரிசி பொரியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் பொரியில் உள்ள சத்துக்கள்
- கலோரிகள்- 402g
- கொழுப்பு- 0.5g
- கார்போ ஹைட்ரேட்டுகள்- 90g
- நார்ச்சத்து- 1.7g
- புரதம்- 6g
- கால்சியம்- 6mg
- மெக்னீசியம்- 25mg
- இரும்பு- 31.7mg
- வைட்டமின் பி6- 0.1mg
- நியாசின்- 4.1mg
கிடைக்கும் நன்மைகள்
பொரியில் குறைந்த கலோரிகள் மட்டுமே உள்ளது, இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக பொரி சாப்பிடலாம்.
குளுட்டன் என்கின்ற புரதம் பொரியல் இல்லை என்பதால் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலில் பொரியை சேர்த்து கொள்ளலாம்.
பொரியில் உள்ள நார்ச்சத்து, அத்யாவசிய ஊட்டச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி கலோரிகள் குறைவாக எடுத்துக்கொள்ள உதவி செய்யும். இதன்மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.
பொரி சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை சரிசெய்யும். மேலும் சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
பொரியில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்கவல்லது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு போதுமான அளவு ஆற்றல் கிடைக்கிறது.
பொரியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைந்த அளவிலேயே இருப்பதால் சிறந்த தின்பண்டமாகும்.
எண்ணெய்யில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக காரப்பொரி, மசாலா பொரி, பேல் பூரி போன்ற ஆரோக்கியமான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.
பொரியில் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே இது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.
பொரியில் உள்ள கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, மற்றும் பைபர் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் எலும்பு செல்கள் நன்றாக வளர்ச்சி அடைய உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |