தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதை.., உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
Health Benefits of Eating Pumpkin Seeds Every Day- உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது அவசியம்.
அந்தவகையில், அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவுப் பொருட்களில் பூசணி விதைகளும் ஒன்று.
பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், ஜிங்க் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

என்னென்ன நன்மைகள்?
இதய ஆரோக்கியம்- பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம் இதயம் மற்றும் தசைகளின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நலனைப் பாதுகாக்க உதவுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தி- பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும், காயங்கள் விரைவாகக் குணமடையவும் ஜிங்க் சத்து அவசியமாகும்.
உடல் எடை கட்டுப்பாடு- இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகின்றன. இதனால் அடிக்கடி உணவு சாப்பிடும் பழக்கம் குறைந்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவம்.

ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம்- பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் தரத்தைப் பராமரிக்க உதவுகிறது.
மார்பகப் புற்றுநோய் அபாயம்- பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் போன்ற பண்புகளைக் கொண்ட தாவரச் சேர்மங்களாகும். இவை மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
நல்ல தூக்கம்- பூசணி விதைகளில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்திக்குத் துணைபுரிகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |