கடல் பாசியை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் கிடைக்கும் அதிசய நன்மைகள் என்ன தெரியுமா?
Back Pain
Cholestrol
Weight Loss
Diabetes
By Kishanthini
2 மாதங்கள் முன்
கடற்பாசி எந்த வகையான உப்பு நீரிலும் மற்றும் நன்னீரிலும் வளரக் கூடியது. இது அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவரமாகும்.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் , ஃபோலேட், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் பி 6 தவிர வைட்டமின்கள் கே, ஏ, சி மற்றும் ஈ ஆகியவையும் காணப்படுகிறது.
குறிப்பாக இது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகின்றது. இதனை உணவில் சேர்ப்பது இன்னும் நன்மையே தரும்.
அந்தவகையில் கடற்பாசியால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
Image - Amarita/Getty Images
- கடல் பாசியில் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கச் செய்யும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து தேய்மானத்தைக் குறைக்கும்.
- கடல் பாசியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.
- கடல் பாசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும்போது கொலஸ்டிரால் குறைவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படும்.
- கடல் பாசியை உங்களுடைய வழக்கமாக உணவோடு சேர்த்து தினமும் சிறிதளவு எடுத்துக் கொண்டு வரும்போது நார்ச்சத்துக்கள் நிறைந்த டயட்டாக மாறிவிடும். இது உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் எடை கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும்.
- கடல் பாசி வயிற்றில் உள்ள என்சைம்களை முறையாகத் தூண்டி, வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தும், கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வயிறை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
- நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அடிக்கடி கடல்பாசியைச் சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வருவதோடு நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.
- கடல் பாசி உடலில் உண்டாகும் ஆக்சிடேட்டிவ் சேதத்தால் உண்டாகும் பிரச்சினைகளைச் சரிசெய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US