அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! காலையில் வெறும் வயிற்றில் அத்தி பழம் நீர் குடித்தால் எடை குறையுமாம்
அத்திப்பழம் பொதுவாகவே பல ஆரோக்கியம் நிறைந்த ஊட்டச்சத்து பழமாகும்.
இதில் நார்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருப்பதால் இந்த பழம் ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஆகவே இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதால் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். அது பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அத்திப்பழம்
பொதுவாக அஞ்சீர் என்று அழைக்கப்படும் அத்திப்பழங்கள் மல்பெரி குடும்பத்தின் ஒரு பகுதியான ஃபிகஸ் மரத்தின் பழமாகும். புதிய அத்திப்பழங்கள் பொதுவாக மிருதுவான விதைகளுடன் இருக்கும்.
அத்திப்பழத்தின் ஊட்டச்சத்து
அத்திப்பழம் சர்க்கரை, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஏராளமான தாதுக்களின் இயற்கையான மூலமாகும். நம் அனைவருக்கும் பெரும்பாலும் வளரும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தாது இரும்பு.
புதிய மற்றும் உலர்ந்த அத்திப்பழங்கள் இரும்பின் சிறந்த மூலமாகும். அத்திப்பழம் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல்க் கொண்டுள்ளது.
இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கை வகிக்கின்றது.
வெறும் வயிற்றில் அத்திப்பழத்தின் நீர் குடித்தால் என்ன நடக்கும்?
- உடல் எடை குறையும்.
- ஜீரணத்திற்கு உதவும்.
- மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
- ஜீரண பிரச்சனை ஏற்படாமல் முற்றிலும் தடுக்கும்.
-
ரத்த சர்க்கரையை குறைக்கும்.
- இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- மாரடைப்பு, ஸ்டோக் ஏற்படாமல் தடுக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
அத்தி பழ நீர் எப்படி செய்வது?
2 அத்தி பழங்களை இரவில் ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில் இதை வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வாமை உள்ளவர்கள், அத்திப்பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |