பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக பெண்ணாக பிறந்த அனைவரும் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
அந்தவகையில் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தலைவலி குணமாகும்: இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைத்தால் தலைவலி உடனே சரியாகிவிடும். ஏனெனில், இந்த பகுதியில்தான் ஒரு குறிப்பிட்ட புள்ளி இருக்கிறது. அந்த புள்ளியில் மசாஜ் செய்யும் போது தலைவலி உடனே குணமாகும்.
தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்: நெற்றியில் பொட்டு வைப்பது தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும்போது மனம் அமைதியாகுவது மட்டுமின்றி, கழுத்து, முகம், மற்றும் முழு உடலும், தசைகளும் தளரும்.
சைனஸ் பிரச்சனை குணமாகும்: நெற்றியில் பொட்டு வைப்பதால் நாசிப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் தூண்டப்படும். மேலும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக சைனஸ் பிரச்சனை குணமாகும் மற்றும் முகப்பில் வீக்கம் குறையும்.
மனதை அமைதிப்படுத்தும்: பொட்டு வைக்கும் பகுதியை தினமும் மசாஜ் செய்து வந்தால் நரம்புகள் தளர்த்தப்படும். இதனால் உடல் மற்றும் மனம் அமைதி அடையும்.
இளமையாக இருக்கலாம்: நெற்றியில் பொட்டு வைப்பதன் மூலம் தசைகள் துண்டப்படும், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து, முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பொலிவாக இருக்கும்.
பார்வை கூர்மையாகும்: இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும் போது அந்த இடத்தில் இருக்கும் ஒரு நரம்பு கண் நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பொட்டு வைப்பதன் மூலம் இந்த நரம்பானது தூண்டப்படும். இதனால் பார்வை கூர்மையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |