30 நாட்கள் மைதா சாப்பிடுவதை தவிர்த்தால் உண்டாகும் நன்மைகள்
இன்று நாம் சாப்பிடும் ரொட்டி, பிஸ்கட், புரோட்டா , பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா முக்கிய பொருளாக உள்ளது.
இதை தொடர்ச்சியாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மைதா சர்க்கரை அளவு, கொழுப்பு அளவை அதிகரிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும் இது ரத்தத்தில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, இதயத்துக்கான ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
வைட்டமின், தாது உப்புக்கள், புரதம் போன்ற ஊட்டசத்துக்கள் இல்லாத ரசாயனம் நிறைந்த மைதா உண்பதால், தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் பாதிக்கப்படுகிறது.
எனவே ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும்போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
மைதாவை தவிர்த்தால் உண்டாகும் நன்மைகள்
சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே உணவு முறையில் மைதாவை தவிர்க்கும் போது செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும்.
மைதாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.
மைதாவை தவிர்ப்பதால், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
இதில் கலோரிகள் அதிகளவில் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் பிஸ்கட், பரோட்டா போன்ற மைதா கலந்த பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட மாவில் கார்போஹட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும். இவற்றை உட்கொள்ளும் போது உடலில் ஆற்றலை செயலிழக்கச் செய்கிறது. எனவே மைதா போன்ற பொருள்களை தவிர்ப்பது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக தினை மற்றும் பிற ஆரோக்கியமான தானியங்களை பயன்படுத்துவதன் மூலம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெறமுடியும்.
மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும்.எனவே மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவு கலந்த உணவுபொருட்களை உண்பதை தவிர்த்து ஆரோக்யமான தானிய உணவு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |