நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை மேம்படுத்த உதவும் பானம்- மருத்துவர் கூறும் விளக்கம்
Heart Failure
Constipation
Diabetes
Blood Pressure
By Yashini
சித்தமருத்துவத்தில், காலையில் இஞ்சி சாறு, மலையில் சுக்கு காபி, இரவில் கடுக்காய் பொடி தண்ணீர் எடுத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும், கபம் என்கின்ற சளி நீங்கும் மற்றும் இளமையாக இருக்கலாம் என சித்தமருத்துவத்தில் கூறப்படுகிறது.
அந்தவகையில், மருந்துகளின் ராஜாவான கடுக்காயின் நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார்.
கடுக்காயின் நன்மைகள்
- உடல், மனம் மற்றும் ஆன்மாவை தூய்மை செய்யக்கூடிய ஆற்றல் மிக்கது.
- இதய நோய் வராமல் தடுக்கிறது.
- இரத்த கொதிப்பு உண்டாவதை தடுக்கிறது.
- நீரிழிவி நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
- குழந்தைபேரு இல்லாதவர்களுக்கு நன்மையை அளிக்கிறது.
- மலச்சிக்கலை தடுக்கிறது.
- செரிமான கோளாறுகள் நீங்குகிறது.
- சருமத்திற்கு பலனளிக்கிறது.
- கல்லீரல் பிரச்னை வராமல் தடுக்கிறது.
- சிறுநீரக பிரச்னை வராமல் தடுக்கிறது.
கடுக்காய் பானம் தயாரிக்கும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடு படுத்தவும்.
- பின் இதில் ¼ ஸ்பூன் கடுக்காய் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- அடுத்து இதனை வடிகட்டி பருகலாம்.
- கடுக்காய் பொடி கடைகளில் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US