நெய்யும் பாலும் சேர்த்து சாப்பிட்டால் முடி வளருமாம்!
பொதுவாகவே நாம் அனைவரும் உடலுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காக பல பொருட்களை நாம் உட்க்கொள்வதும் உண்டு.
அந்தவகையில் பால் மற்றும் நெய்யினால் உடலுக்கு பல நன்மைகள் கிடைகிறது. பால் மற்றும் நெய்யின் தனிப்பட்ட ஆரோக்கிய குணங்கள் பற்றி நாம் அறிந்திருக்கக்கூடும்.
இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரியுமா? அது பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாலில் இரும்பு, புரதம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் A, D, B-6, E மற்றும் K ஆகியவை உள்ளன.
நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன.
பால் + நெய்
-
நோயெதிர்ப்பை பலப்படுத்துகிறது
- எடையை நிர்வகிக்கிறது
- சரும மற்றும் முடி ஆரோக்கியம்
- செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- எலும்புகளின் ஆரோக்கியம்
- மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கும்
- தூக்கமின்மை
எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
பால் மற்றும் நெய்யின் கலவையானது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி நெய் எடுக்க வேண்டும். மஞ்சள் பாலில் நெய் கலந்து பருகுவது சருமத்தை நீரேற்றம் செய்து அதன் பொலிவை மீட்டெடுக்கும். மேலும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.