இரவில் குளிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த பிரச்சினைகள் வரவே வராது
பொதுவாகவே உடல் மற்றும் உள ஆராக்கியத்துக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமே அதே அளவுக்கு சுகாதாரத்தை பேணுவதும் முக்கிய இடம் வகிக்கின்றது.
அன்றாடம் வெயில் தூசு மற்றும் நோய்களை பரப்பும் கிருமிகளுக்கு மத்தியில் வாழக்கூடிய நிர்பந்தத்திலேயே அனைவரும் வாழ்கின்றோம். எனவே அன்றாட உணவை போன்று குளியலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
கோடைகாலத்தில் பெரும்பாலானவர்கள் இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் சாதாரண தினங்களிலும் கூட காலை மற்றும் பகல் நேரங்களில் குளிப்பதை விடவும் இரவு நேரத்தில் குளிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது. அவை குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இரவில் குளிப்பதன் நன்மைகள்
நாள் முழுவதும் வெளியில் இருந்து அழுக்கான உடலில் பல்வேறு அபாயகரமான நோய்களை பரப்பும் கிருமிகள் தங்கியிருக்கும். எனவே குறிப்பாக நாம் படுக்கைக்கு செல்லும் முன்னர் குளிப்பதால் ஏறாளமான நோய் தாக்கங்களில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் சரும ஆரோக்கியத்துக்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது. முகப்பரு பிரச்சினை மற்றும் சரும நோய்கள் உள்ளவர்கள் இரவில் படுக்ககைக்கு செல்லும் முன்னர் குளிப்பது மிகவும் பணனுள்ளதாக இருக்கும். அதனால் சருமம் எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
தூங்குவதற்கு முன்னர் குளிப்பதால் மன அழுத்தம் மற்றும் உடல் அசதி இல்லாமலாக்கப்படுவதுடன் தூக்கமின்மை பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். அது மட்டுமன்றி இரவில் குளிப்பது ரத்த அழுத்தத்தையும் சீராக பராமரிக்க துணைப்புரிகின்றது.
இரவில் குளிப்பாதால் மூளையின் ஆற்றல் அதிகரிப்படுதுன் சிறந்த தூக்கத்தையும் கொடுக்கின்றது. அது மட்டுமின்றி, இரவில் குளிப்பது ஒற்றைத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி மற்றும் பெரிய தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு கொடுக்கின்றது.