இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நூக்கோல்; கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
குளிர்காலத்தில் நன்மை பயக்கும் சில காய்கறிகளில் நூக்கோலும் ஒன்றாகும். நூக்கோலானது வேரில் உணவை சேகரிக்கும் காய்கறி வகையாகும். இந்த பச்சை காய்கறியில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் களஞ்சியமாக இருக்கிறது. வேர் மற்றும் இலை இரண்டையுமே நீங்கள் உணவாக பயன்படுத்தலாம்.
இதை தினசரி உணவில் எடுத்துக்கொள்வதால் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படும். அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நூக்கோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
i. கலோரிகள்: 28 கலோரிகள்
ii. கார்போஹைட்ரேட்டுகள்: 6.43 கிராம்
iii. உணவு நார்ச்சத்து: 1.8 கிராம்
iv. சர்க்கரை - 3.89 கிராம்
v. புரதம் - 0.9 கிராம்
vi. கொழுப்பு: 0.1 கிராம்
vii. வைட்டமின்கள்: வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் K, வைட்டமின் B-complex (B1, B2, B3 மற்றும் B5 உட்பட)
viii. தாதுக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ்
நூக்கோலின் ஆரோக்கிய நன்மைகள்
1. நோயெதிர்ப்பு சக்தியை ஆதிகரிக்கக்கூடிய வைட்டமின்-சி நூக்கோலில் அதிகம் இருப்பதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கிறது.
2. நூக்கோலில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தானது, இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
3. நூக்கோலில் உள்ள நார்ச்சத்தானது செரிமான பிரச்சினைகளில் இருந்து உடலை பாதுகாத்து, ஆரோக்கியமான செரிமானத்தை வழங்குகிறது.
4. நூக்கோலில் உள்ள வைட்டமின் A, கண் ஆரோக்கியத்திற்கும் வயது தொடர்பான Macular சிதைவு அபாயத்தை குறைப்பதற்கும் உதவுகிறது.
5. நூக்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸானது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
6. நூக்கோலில் உள்ள பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதில் அதிகமான வைட்டமின்-C இருப்பதால், இது குழந்தையின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதை தனது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் சர்க்கரை நோயாளிகளும் வைத்தியரி்ன் பரிந்துரையின் பின்னர் இதை உட்கொள்வது சிறந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |