உடல் எடையை சட்டென குறைக்கும் வெங்காய சூப்!
இன்றைய காலக்கட்டத்தில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அனைவரும் பாதிக்கப்படும் ஒரு விடயமாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு.
இதனால் பலரும் மன கஷ்டத்தில் பாதிக்கப்படுகின்றார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல விடயங்களை செய்வார்கள். ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை.
ஆனால் ஒரு சிலருக்கு வீட்டு வைத்தியம் மூலம் உடல் எடையானது குறைவடையும். அதிலும் வெங்காயத்தை வைத்து எப்படி உடல் எடையை குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது
எடையை குறைக்க வெங்காய சாற்றை தொடர்ந்து குடிப்பதாகும். வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு தயாரிக்கலாம். இது சத்தானது.
வெங்காய சூப்
வெங்காய சூப்பை மதிய உணவு அல்லது இரவு உணவில் குடிக்கலாம். இதன் சூப் நீண்ட நேரம் முழுமையான உணர்வுடன் இருக்க உதவும். து தவிர பச்சை வெங்காயத்தையும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் உடல் எடையானது குறையும்.
செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
-
பெரிய வெங்காயம் – 4
- பூண்டுப் பற்கள் – 4
- பச்சை மிளகாய் – 2
- கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப்
-
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகுத் தூள் – ஒரு டீ ஸ்பூன்
- நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீ ஸ்பூன்
- சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
-
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை விட்டு உருகியதும் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின்னர் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
- நன்றாக வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
- கொதித்து வரும் வேளையில் தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால் சுவையான வெங்காய சூப் ரெடி!
வெங்காயத்தின் பிற நன்மைகள்
-
நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும்.
-
இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்கும்.
-
தொற்றுநோய்களை தவிர்க்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- எலும்புகளை வலுப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |