நோயில்லா வாழ்வு! முள்ளங்கியில் கொட்டிக் கிடக்கும் அற்புதங்கள்
தனித்துவமான சுவை மற்றும் மணம் நிறைந்த முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இதை உங்கள் உணவில் சேர்த்து வர உடல் எடையை குறைப்பதும் முதல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கியில் சாம்பார் முதல் பரோட்டா வரை ஏராளமான சுவையான ரெசிபிகளை செய்ய முடியும்.
முள்ளங்கியில் உள்ள நன்மைகள்
முள்ளங்கியில் அதிக அளவுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதை உணவில் சேர்த்து வர சளி இருமல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம்.
முள்ளங்கி ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது.
முள்ளங்கியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் மல இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இதனால் உடல் பருமன், வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன. இதை தினசரி உணவில் சேர்த்து வர ஒரு சில புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முள்ளங்கியை சாப்பிடும் பொழுது நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
முள்ளங்கி இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.மேலும் முள்ளங்கியை சாப்பிட்டு வர உடல் சூட்டையும் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி உணவு சேர்த்துக் கொள்ளலாம் இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம்.
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் C போலிக், ஆசிட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. இது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |