சாம்பார் சாதம் சாப்பிட்டால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!
சாம்பார் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த அளவுக்கு உலக மக்கள் அனைவரையும் கவரும் சுவையும் நிறமும் கொண்டது இந்த உணவு.
சாம்பார் ஒரு அருமையான குறைந்த கலோரி கூட்டமைப்பில் உருவான உணவாகும். பல்வகை ஊட்டச்சத்துகளும் ஒருங்கிணைந்த ஒரு உட்கொள்ளல் தான் இந்த சாம்பார்.
சாம்பார் என்பது சீரகம் மஞ்சள்,கடுகு,வெந்தயம் ,மிளகாய், தனியா போன்ற மசாலா பொருட்களுடன்,பருப்பு மற்றும் காய்கறிகளின் கலவையால் உருவாவது. ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக இது பார்க்கப்படுகிறது.
இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது மற்றும் ஒவ்வொன்றின் நன்மைகளும் ஏராளம் . இதில்சேர்க்கப்படும் முக்கிய பொருளான பருப்பில் புரத சத்து அதிகமாக இருக்கிறது.
காய்கறிகள் அதிகமான நார்ச்சத்து கொண்டவை. இவற்றிற்கு தாளிப்பாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்ப்பது கொழுப்பு சத்துக்காக. இப்படி ஒரு நாளில் நமக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் ஒரு உணவில் கிடைப்பது நமக்கு ஒரு வரமாகும்.
தனித்தனியாக தேடி சென்று எதையும் உண்ணாமல் தினமும் சாம்பார் சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகின்றன. நல்ல சுவையான உணவை உண்டு உங்கள் எடையை நீங்கள் குறைக்கலாம்.
குழந்தைகளுக்கு இது மிக சிறந்த உணவு. சாம்பார் செய்ய பயன்படும் பருப்பு நீரை எடுத்து 7 மாத குழந்தைக்கு கூட ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து பருக கொடுக்கலாம்.
பெரும்பாலும் குழந்தைகளின் முதல் திட உணவு பருப்பு சாதமாகத்தான் இருக்கும். இந்த சாம்பாருடன் நெய் கலந்து குழந்தைக்கு கொடுக்கும் போது குழந்தை போஷாக்குடன் வளரும்.
சாம்பார் பொடிகளை கடையில் வாங்குவதை விட சாம்பார் பொடி செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு வீட்டிலேயே அதை செய்து சாம்பாரில் போடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.