தினமும் ஒரு கப் தக்காளி சூப்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடட்டுகளும், வைட்டமின்களும் உள்ளன.
இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
அதன்படி, தக்காளி சூப்பை தினமும் இரவு 1 கப் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள் என்ன?
உடலை சூடாக வைத்துக் கொள்ளும்- குளிர்காலத்தில் சூடான தக்காளி சூப் குடித்தால் உடல் வெப்பம் அதிகரித்து, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் உடல் இதமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி- தக்காளியில் வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும். அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க உதவும்.
இதய ஆரோக்கியம்- தக்காளியில் உள்ள லைகோபைன் கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகம் இருக்கும், அதை குறைக்க உதவும்.
சருமத்திற்கு நல்லது- குளிர்காலத்தில் தக்காளி சூப் உடலுக்கு நீரேற்றம் அளித்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். வைட்டமின் A, C சருமத்திற்கு பொலிவு தரும்.
செரிமானத்திற்கு உதவும்- தக்காளி சூப் செரிமானத்தை மேம்படுத்தும். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் குறையும். உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |