தினமும் மறக்காமல் 5 வால்நட்ஸ் சாப்பிடுங்கள்: இந்த 10 பிரச்சனைகள் வரவே வராது
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
இந்த வால்நட்ஸில் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
istock
வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள்
வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.
istock
வால்நட்ஸ் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு வகை பருப்புகள் மற்றும் பெர்ரி வகைகளை காட்டிலும், வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம், மெலடோனின், கரோட்டினாய்டுகள் போன்ற உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த வால்நட்ஸில் உள்ளன.
istock
வால்நட் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன.
இவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
வால்நட்ஸில் வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது.
istock
மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பருப்புகள் பசியை குறைப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகின்றன.
வால்நட்ஸில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து தலைமுடி உதிர்வதை குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
istock
வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |