பிளாக் டீ பருகுவது உடலுக்கு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா?
Fat
Diabetes
Immunity
Dental problem
By Kishanthini
உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக பிளாக் டீ உள்ளது.
பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன் இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.
இது பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது. குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது.
அதுமட்டுமின்றி இது பல நன்மைகளும் வழங்குகின்றது அதைப்போல் தீமைகளும் உண்டு. தற்போது அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.
நன்மைகள்
- நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.
- வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பிளாக் டீயில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
- சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.
- பிளாக் டீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பொருள் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
- பிளாக் டீயில் உள்ள அமினோ ஆசிட் மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.
- பிளாக் டீயில் ஃப்ளூரைடு இருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது.
- பிளாக் டீ பாக்டீரியாவிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.
- ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட் செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
- பிளாக் டீ மன அழுத்தத்தை தடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது. இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.
தீமைகள்
- ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக பிளாக் டீ அருந்த கூடாது.
- அதிகமான பிளாக் டீ பருகினால் உறக்கம் பாதிப்படைய கூடும்.
- வெறும் வயிற்றில் பிளாக் டீ வயிறு எரிச்சலை உண்டாக்கும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US