உடல் எடை குறைக்க, கண் பார்வையை மேம்படுத்த இந்த காயை வாரத்திற்கு 2 முறை சாப்பிடுங்க!
தினசரி நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு காய் வகையை கூட்டு, பொரியல், வதக்கல் என பல முறைகளில் தயாரித்து கூடுதல் பதார்த்தமாக உண்கிறோம். காய் வகைகளில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகையும் இடம்பெறுகிறது.
முள்ளங்கி, முள்ளங்கி இலை, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகங்கள், வயிறு, வாய் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்க்கு இக்காயின் மருத்துவப்பண்புகள் சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இக்காயில் காணப்படும் ஐசோதியோசையனைட் பொருளானது புற்றுச்செல்களின் வளர்ச்சியினை தடைசெய்கிறது.
சுவாச பாதையில் தொற்று
முள்ளங்கியானது சளி மற்றும் ஒவ்வாமையினால் மூக்கு, தொண்டை, காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகிறது. இக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சுவாச பாதையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல்
நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
கண் பார்வை
முள்ளங்கி கீரையை அடிக்கடி உணவோடு சேர்த்து வருபவர்களுக்கு கண்களில் எந்தவித பாதிப்புகள் வராமல் தடுக்கும். கண் பார்வையை மேம்படுத்தும். உடல் எடை குறைக்க
உடல் எடை குறைக்க
நினைப்பவர்கள் முள்ளங்கி கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் கொழுப்பு படிவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
சிறுநீரகத்திற்கு
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல் மற்றும் பொடுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது. தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள் சிவப்பு முள்ளங்கி சாற்றினை குடிக்கலாம்.