அப்பளம் சாப்பிட்டால் புற்றுநோய் வரலாம்! எச்சரிக்கை செய்தி
கலர் அப்பளம், வத்தல் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பல நிறங்களில் விற்கப்படும் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்கள் சேர்க்கப்படுவதால் அவற்றை உட்கொள்ளும் போது அல்சர், புற்றுநோய் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகப்புத்துறை உத்தரவிட்டது. மேலும், இவைகளில் மக்கள், குழந்தைகளை கவரும் வகையில் அனுமதித்ததை விட அதிகமாக அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிறம் சேர்த்த வடகம், வத்தல், அப்பளத்தை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்தது.
உணவுத்துறை அதிகாரி சதிஷ்குமார் இது குறித்து கூறியதாவது, அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு அல்சர், கேன்சர் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தைகளுக்கும் இந்த வண்ண நிறத்தால் ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுகின்றனர். ஆனால் வண்ணம் சேர்க்காத அப்புறம் தான் சாப்பிட வேண்டும் என்றும், இது போன்ற ரசாயன நிறமிகள் சேர்க்கப்பட்ட அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக உணவுத் துறை அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கலர் அப்பளத்தில் சிந்தடிக் வகையான வேதிப் பொருள் உள்ளது என்றும், அது குடலில் போய் தங்கி ஒற்றுமையை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடைகளில் கலர் சேர்த்து விற்கப்படும் அப்பளம் மற்றும் வத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.