2 டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் ஓமம்! இந்த கலவையை தினமும் குடிச்சு பாருங்க... அற்புத மாற்றங்கள் உடலில் நடக்குமாம்!
சமையலில் முக்கியமாக பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்று சீரகம். ஏராளமான மருத்துவ குணம் கொண்டது.
குறிப்பாக இது செரிமான பிரச்சினைகளுக்காக அதிகமாக எடுத்து கொள்ளப்படுகின்றது. அதுமட்டுமின்றி இதனுடன் ஓமம் கலந்த நீரை குடிப்பதனால் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகின்றது.
இந்த இரண்டு பொருட்களும், அசிடிட்டி மலச்சிக்கலின் மூல காரணத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பானம் சீரகம் மற்றும் ஓமம் விதைகள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் பானம் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இவை எப்படி தயாரிப்பது, இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- தண்ணீர் - ஒரு கிளாஸ்
- சீரகம் - 2 தேக்கரண்டி
- ஓமம் விதைகள் - 1 தேக்கரண்டி
செய்முறை
சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும்.
மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் .
நன்மைகளை என்ன?
- ஓமம் தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
- உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது கூட நல்லது.
சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
- உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.