இரத்த சர்க்கரை அளவு சீக்கிரம் குறைய பார்லி தண்ணீர் போதும்: ஏன் தெரியுமா?
சர்க்கரை நோயை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் வழக்கமான உணவுகளோடு ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், பார்லி தண்ணீர் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதளவில் உதவுகிறது. அது குறித்து விரிவாக காணலாம்.
Getty Image/ Shutterstock
இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் பார்லி தண்ணீர்
பார்லி தண்ணீர் இயற்கையாகவே நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை குறைக்க பெரிதளவில் உதவுகிறது.
பார்லி நீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது.
istock
டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட பார்லி நீர் குடிப்பதால், அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
பார்லியில் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் இருப்பதால், இன்சுலின் உணர்திறனை இது அதிகப்படுத்துகிறது. டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமாகும்.
வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியத்தில் பார்லி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது.
மேலும் இதில் பல ஊட்டசத்துகள் இருப்பதால் டயட்டில் பார்லியை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
செரிமானத்திற்கு உதவக்கூடிய டயட்டரி நார்ச்சத்து பார்லியில் அதிகளவு உள்ளது. இதை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன் காரணமாக சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்.
பார்லியில் உள்ள டையூரிடிக் பண்புகள் காரணமாக, நமது உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும், வயிறு உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |