ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
cancer
men
weight loss
urine problem
By Kishanthini
உயிரை பறிக்கு கொடிய நோய்களில் புற்றுநோய் முதன்மை இடத்தில் உள்ளது. நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும்.
இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.
புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதில் பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஆண்களும் தான்.
ஆண்களில் இறப்பு ஏற்படுவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக புற்றுநோய் உள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் இந்த புற்றுநோயின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
அந்தவகையில் ஆண்களில் ஏற்படும் புற்று நோயின் ஆரம்பகால அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவோம்
- உடலில் உள்ள மச்சம் அளவில் பெரியதாகவோ, நிற மாற்றம் அடைந்தாலோ, மச்சத்தின் அளவு பட்டாணியை விட பெரியதாக இருந்தாலோ அது தோல் புற்று நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே நீங்கள் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
- சிறுநீரில் வெளியாகும் இரத்தம் ஆகும். இது ஆரம்ப காலகட்டத்திலேயே தெரிய வருகிறது என்றும், இதனால் வலி மற்றும் பிற எந்த அறிகுறிகளும் தென்படாது என்றும் கூறப்படுகிறது. இது பரவலாகக் ஆண்களைப் பாதிக்கும் புற்றுநோய் என்பதால், இந்த அறிகுறிகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிறுநீரில் இருந்து வெளியேறும் ரத்தம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கலாம்.
- விழுங்குவதில் சிரமம் இருந்தால் அதனை டிஸ்பேஜியா என்று அழைக்கின்றனர். உங்களுக்கு இந்நோய் பாதிப்பு இருந்தால் உணவுகளை விழுங்குவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் தொண்டை பகுதியில் ஒரு இறுக்கம் ஏற்படலாம். இதனால் அங்கு உணவுகள் சிக்கிக்கொண்டு விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
- இடுப்பு, கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் நிணநீர் கணுக்களின் அதிக செறிவு உள்ளது. நீங்கள் நோய்வாய்படும் போது இந்த சிறிய முனைகள் பெரிதாகி விடுகிறது. இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்கு நிணநீர் மண்டலங்களில் வீக்கம் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். நிணநீர் மண்டலத்தின் வீக்கம் இதன் முக்கிய அறிகுறியாகும்.
- ஆண்களில் வயது மற்றும் புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம். புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர் செல்லும் குழாயின் கீழ் உள்ளது. சிறுநீர்ப்பை மீது அழுத்தம் அதிகரிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பரம்பரையாக ப்ரோஸ்டேட் புற்றுநோய் இருந்தால் ஆண்களுக்கு இந்நோய் ஏற்படலாம்.
- உங்கள் உதடுகள் அல்லது வாயில் புண்கள், வாயின் உள் பகுதியில் வெள்ளை அல்லது சிவப்பு புள்ளிகள் போன்றவை இருந்தால் அது புற்று நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை கண்டவுடன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அதற்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- நீங்கள் எடையை இழக்க எந்தவித முயற்சியும் செய்யாமல் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படுகிறது என்றால், அது புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே திடீரென எடை இழப்பு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும்.
- புற்றுநோயால் ஏற்படும் சோர்வு என்பது சாதாரணமாக நமக்கு ஏற்படும் சோர்வு போன்றதல்ல. நல்லதொரு இரவுத் தூக்கத்திற்கு பிறகும் உங்களுக்கு சோர்வு இருக்கிறது என்றால் அது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். சில வயிற்று புற்றுநோய் காரணமாக ரத்த இழப்பு ஏற்பட்டு சோர்வு ஏற்படலாம். இது நமது உடலில் புற்று நோய் இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US