தினமும் 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளை தருமா? எப்படி எ்டுத்து கொள்ளலாம்?
வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். மேலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.
வெந்தயம் ஆயுர்வேதத்தில், அதன் தனித்துவமான பயன்கள் மற்றும் பண்புகள் காரணமாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
எனவே தினமும் 10 கிராம் வெந்தயம் சூடான நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும்?
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள்.
அந்த நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து தேநீர் போல் பருகலாம் அல்லது அப்படியேவும் குடித்துவிடலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினசரி தேநீர் போல் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
நன்மைகள் என்ன?
- வெந்தயம் நீரிழிவு நோய் மட்டுமன்றி பெருங்குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கும் உதவுகிறது.
- நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்னைகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உடனடி வீட்டு வைத்தியமாக உதவுகிறது.
- உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை அழித்து முகத்தின் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்கி எப்போதும் இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது.
- சில நேரங்களில் வெந்தய கீரைகளும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. கீரையை சூடாக்கி தசை வலி, வீக்கம் உள்ள இடங்களில் வைத்து கட்டினால் வலி குறையும் .