தினசரி தூங்க செல்லும் முன் இந்த தேநீரை குடிங்க! உடல் எடை அதிகரிக்காதாம்!
ஒரு நறுமண மசாலாவாக நம் உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இலவங்கப்பட்டையில் பல்வேறு மருத்துப்பயன்கள் நிறைந்து காணப்படுகின்றது.
மாங்கனீசு, இரும்பு, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் கே உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கின்றன.
குறிப்பாக உடல் எடை அதிகரிக்கமால் பார்த்து கொள்ள உதவுகின்றது. அதிலும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிப்பது, உடலில் அதிகரிக்கும் கொழுப்பை எதிர்த்து போராட உதவும்.
அதுமட்டுமின்றி தவிர கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். தற்போது இந்த அற்புத டீயினை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 1 கப்
- இலவங்கப்பட்டை பவுடர் - 1 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- கருப்பு மிளகு பவுடர் - 1/4 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் .
செய்முறை
முதலில் ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இலவங்கப்பட்டை பொடி அல்லது இலவங்கப்பட்டை குச்சி, கருப்பு மிளகு பவுடர், தேன் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவை சரியாக கொதித்தவுடன் நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இந்த டீயை வடிகட்டி சூடாக குடிக்கவும்.
தினசரி தூங்க செல்லும் முன் இலவங்கப்பட்டை டீ குடிப்பது உங்கள் சோர்வடைந்த தசைகளை தளர்த்தி, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை எரித்து எடையை குறைக்க உதவி செய்யும்