தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?
பொதுவாக பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களுக்கு உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. அதில் தயிரும் ஒன்று. தயிரில் விட்டமின் B-12 , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.
தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினை இருப்போர் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.
- தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
- பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
- பாலில் லாக்டோ இருக்கிறது. தயிரில் லாக்டோபேசில் என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட டாக்டர்கள் சொல்வது இதனால்தான்.
- பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
-
இளம் பெண்கள் தயிர் சாப்பிடுவதால், அவர்களின் உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
-
அல்சர் பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்சருக்குக் காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச்சத்துக்களும் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.
-
மூளையின் திறனை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கும் அனைவருக்கும் நல்ல ஞாபக சக்தியைத் தரும். தயிர் சாப்பிடுவதால் சருமம் பளபளக்கும். நீண்ட கூந்தலையும் பெறலாம்.
- உடல் இளைப்பதற்கும் தயிர் உதவுகிறது. இதயநலத்துக்கும் நல்லது. பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்னைகளை அறவே நீக்கிவிடும் சிறப்பான குணம் தயிருக்கு உண்டு