ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்? இந்த எண்ணிக்கையை தாண்டினால் பிரச்சினை தான்
நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது.
நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக சராசரியாக ஒருவர் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒரு நாளைக்கு 4 முதல் 10 முறை சிறுநீர் கழிக்கலாம். சிறுநீர்ப்பையின் அளவு 2 கப் அளவு சிறுநீரை தேக்கி வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். சிறுநீரை 3 முதல் 5 மணி நேரம் வரை அடக்கி வைத்திருக்க உதவிடும்.
சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ உண்டானால் அதனை உடனடியாக கவனியுங்கள். குறைந்த நேரமோ அல்லது அதிக நேரமோ சிறுநீர் கழித்தால் அதுவும் ஆபத்தானது.
ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போது இருக்கும் நேர இடைவேளையை வைத்தே உங்களது உடல் ஆரோக்கியத்தை எளிதாக கணக்கிடலாம்.
இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு முறை எழுந்து சிறுநீர் கழித்தால் அது சாதாரணமானது. சிலர் தூக்கத்தில் நடுவில் எழுந்தரிக்க மாட்டார்கள். இதுவும் சாதாரணமானது தான். ஆனால் இரண்டு முறைக்கும் அதிகமாக இரவுகளில் சிறுநீர்கழிக்க நேர்ந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதென்று அர்த்தம்.
சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது ஆபத்தானது. அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிக நேரம் அடக்கி வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
வழக்கத்திற்கு மாறாக குறைவாகவோ அல்லது அதிகமாவோ சிறுநீர்கழித்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். அதே போல சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ இருந்தால், சிறுநீரின் நிறம் மாறியிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.