சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த நாட்டவர்கள்தான்... சுவிஸ் அரசு எடுத்துள்ள நடவடிக்கை
சுவிஸ் மாகாணமொன்றில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் பாதிபேர் வெளிநாட்டவர்களும் தடுப்பூசி பெறாதவர்களும் என தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் தலைநகரமான Bernஇலுள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளோரில் பாதிபேர் வெளிநாட்டவர்களும் தடுப்பூசி பெறாதவர்களும் என தெரியவந்துள்ளதையடுத்து, அவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள வைப்பதற்கு தூண்டும் நடவடிக்கைகளை பெடரல் சுகாதார அலுவலகம் அதிகரித்துள்ளது.
Bern மாகாணம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவின் நான்காவது அலையில் சிக்கியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள், குறிப்பாக தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அந்த நாடுகள், குறைவாக தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனோபாவம் கொண்டவை என Bern சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆகவே, இத்தகைய கூட்டத்தாரை எட்டும் வகையிலான முயற்சிகளை மீண்டும் இரட்டிப்பாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள Bern மாகாணம், அவர்களில் பலர் தேசிய மொழியோ ஆங்கிலமோ தெரியாதவர்கள் என்றும், ஆகவே, அவர்களை அணுகும் முயற்சியாக, 20 மொழிகளில் தடுப்பூசி பெற்றுக்கொள்வது குறித்த விடயங்களை தற்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.