மருத்துவக் காப்பீடு தொடர்பில் சுவிஸ் நாட்டவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
சுவிட்சர்லாந்தில், அடுத்த ஆண்டு, மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வளவு கட்டண உயர்வு?
சுவிட்சர்லாந்தில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை அடுத்த ஆண்டு உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், குறிப்பாக, ஜெனீவாவில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை மிகவும் அதிக அளவில் உயர இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை சராசரியாக, 8.7 சதவிகிதம் அல்லது 29 சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகரித்து, மாதம் ஒன்றிற்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை 359.50 சுவிஸ் ஃப்ராங்குகளாக ஆக உள்ளது.
மிக அதிக கட்டணம்
Ticino மாகாணத்தில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை 10.5 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது. ஜெனீவாவில், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை அதிகபட்சமாக 454.40 சுவிஸ் ஃப்ராங்குகளாக அதிகரிக்க உள்ளது.
Vaud மாகாணத்தில் வாழ்வோர் 400 சுவிஸ் ஃப்ராங்குகளும், Valais மாகாணத்தில் வாழ்வோர் 334 சுவிஸ் ஃப்ராங்குகளும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தவேண்டியிருக்கும்.
நீங்கள் குறைவான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்த விரும்பினால், Appenzell Innerrhoden, Uri போன்ற மாகாணங்களுக்குச் செல்லலாம். ஏனென்றால், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை, Appenzell Innerrhoden மாகாணத்தில் 246 சுவிஸ் ஃப்ராங்குகளும் Uri மாகாணத்தில் 272 சுவிஸ் ஃப்ராங்குகளும் செலுத்தினால் போதும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |