தீபாவளி நேரத்தில் உணவுகள், இனிப்புகள் நிறைய சாப்பிடுவோமே! ஆரோக்கியமா இருக்க இதை செய்யுங்க
தீபாவளி நெருங்கிவிட்டது! இந்த நாளின் முக்கிய அம்சம் விதவிதமான எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புகளை பலரும் ஒரு பிடி பிடிப்பார்கள்.
இதன் காரணமாக சிலருக்கு ஆரோக்கியத்தில் சிக்கல்கள் உருவாகலாம். ஆரோக்கிய பிரச்சனை வராத அளவுக்கு உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.
தீபாவளியின் போது உயர் கலோரி இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் பிரதானமானவை.
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக இந்த வகை உணவுகளால் பாதிக்கப்படக்கூடியவர்கள். ஆகவே இத்தகையவர்கள் ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்ய வேண்டும்.
curiouscuisiniere
அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தைத் தடுக்க சர்க்கரை மற்றும் எண்ணெய் சுவையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
இரவில் அதிக சர்க்கரை அல்லது வறுத்த உணவை உட்கொள்வதால் இரவில் தூங்காமல் கஷ்டப்படுவீர்கள். 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இரவில் சர்க்கரை உணவுகளை உட்கொள்பவர்கள் அமைதியற்றவர்களாகவும், அதிக நேரம் தூங்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
முக்கிய குறிப்பு
அளவுக்கு மிஞ்சினால் அர்மிதமும் நஞ்சு! எனவே அனைத்து பலகாரங்களையும் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவை உங்களுக்கு சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு, உடல் எடையும் கட்டுக்குள் இருப்பதோடு தேவையில்லாத வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.
mothersrecipe