கரும்பு ஜூஸ் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்
கரும்புச்சாறில் நிறைய ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கிறது.
ஆனால் அதிகமாக கரும்பு சாறு குடித்தால் ரத்த சர்க்கரை அதிகரிக்கும். சளி பிடிக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் தினமும் சிறிதளவு கரும்புச்சாறை குடித்து வந்தால் உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்ப்பது நல்லது.
கரும்புச்சாறில் மற்ற இனிப்பு மற்றும் பழச்சாறுகளை விட கிளைசெமிக் குறியீடு குறைவு. அதனால் எப்போதாவது நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கரும்புச் சாறு குடிக்கலாம்.
கரும்புச்சாறை தினமும் குடித்துவந்தால் உடலில் உள்ள சூடு குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.மேலும் உடலை உள்ள கழிவுகளை வெளியேற்றும் பண்பு கொண்டது.
கரும்புச்சாறில் ஆன்டி ஆக்சிடண்ட், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
கல்லீரலுக்கு கரும்புச்சாறு மிகவும் நல்லது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கூட குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
கரும்புச்சாறில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது அனீமியா என்னும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
தினமும் சிறிதளவு கரும்புச்சாறு குடித்து வந்தால் ஜீரண ஆற்றல் மேம்படும். அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஆகியவை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |