ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா?
Ramadan
By Kishanthini
பொதுவாக ரமலான் நோன்பு இன்னும் சில தினங்களிலே வரவுள்ளது. இந்த நேரம் இஸ்லாமியர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக நோன்பை மேற்கொள்வது வழக்கம்.
நீண்ட நேரத்திற்கு பின் இஃப்தார் வேளையில் சாப்பிடும் போது, உடலை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும்.
இல்லை என்றால் இது உடல் வறட்சியை ஏற்படுத்திவிடும். அந்தவகையில் தற்போது அந்த பானங்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
- குளிர்ந்த நீரில் மாம்பழத் துண்டுகள், ஒரு கையளவு புதினா இலைகள், சிறிது ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஜில்லென்று குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியும் அடையும்.
- குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளுடன், சிறிது தேன், ஒரு கையளவு புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.
- தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து, அதோடு ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து கலந்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி அடைவதோடு, வறட்சி அடையாமலும் இருக்கும்.
- 1 ஸ்பூன் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து நோன்பை முடிக்கும் போது குடிப்பது மிகவும் நல்லது.
- காலையிலேயே நீரில் சிறிது வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். மாலைக்குள் இது கரைந்துவிடும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு, சிறிது ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US