காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு Healthy Drink: எப்படி தயாரிப்பது?
காலை உணவை தவிர்த்தால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும், மதிய வேளையில் சரியாக சாப்பிட முடியாது.
இதுபோல் தொடர்ச்சியாக காலை உணவை தவிர்த்து வந்தால் அல்சர் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
காலை உணவை தவிர்ப்பவர்கள் இந்த ஆரோக்கியமான பானத்தை தினமும் குடித்து வர உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 2 ஸ்பூன்
- பாதாம் – 6
- பேரிட்சை பழம் – 7
- பட்டை – 1
- வாழைப்பழம் – 1
- பால் – 1/2 டம்ளர்
- நாட்டுச்சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ராகி மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அதை அடுப்பில் வைத்து கூழ் பதத்திற்கு கிளறி வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதாம் மற்றும் பேரிச்சை பழத்தை ஊறவைத்து, பாதாமை தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பாதாம், பேரிச்சை, பால், காய்ச்சிய ராகி கூழ், வாழைப்பழம், நட்டுச்சர்க்கரை என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு டம்ளரில் ஊற்றி குடித்தால் சத்தான காலை உணவு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |